கோவையில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் சமத்துவ மக்கள் கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் இலவச மாஸ்க்குள் வழங்கி சமத்துவ மக்கள் கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் கொரோனா வைரஸ் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் இலவச மாஸ்க்குள் வழங்கி சமத்துவ மக்கள் கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் காய்ச்சல் தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. உலகளவில் 3,400 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பராவமல் தடுக்க தமிழக அரசு போர்க்கால பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில் கோவையில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்களிடம் கொரேனா வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டு்ம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தொடர்ந்து கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள், பாதிப்பின் தீவிரம், பரவும் விதம், தடுப்பு வழிகள், சிகிச்சை முறைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் இலவச மாஸ்க்குகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் முத்துராஜ் ,தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உக்கடம் ஷெரீப், ஆலடி ஆனந்த், முத்துப்பாண்டி, விஜயலிங்கம், சிங்கை சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...