கோவையில் பறவைக்காய்ச்சல் நோயினை தடுக்க தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம் ; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - ஆட்சியர் கு.இராசாமணி

கோவை: கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால், கோவையில் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால், கோவையில் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பறவைக்‌ காய்ச்சல்‌ தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்‌ குழு கூட்டம்‌ நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சலை தடுக்க என்ன வழிமுறைகளை எல்லாம் மேற்கொள்ளவேண்டும் என விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவிக்கையில், கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ பறவைக்‌ காய்ச்சல்‌ நோய்‌ ஏற்படாத வகையில்‌ பல்வேறு நடவடிக்களை எடுத்து வருவதாக கூறினார். குறிப்பாக கோழிப்பண்ணையில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய உயிர்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மற்றும்‌ நோய்‌ ஏற்பட்டால்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பம்‌ சார்ந்த விபரங்களை கால்நடை பராமரிப்புத்துறையிடம்‌ கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

மேலும் பண்ணைகளில்‌ வழக்கத்திற்கு மாறாக கோழிகள் இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக கேரளாவில்‌ பறவைக்‌ காய்ச்சல்‌ நோய்‌ ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டத்தில்‌ பரவாமல் இருப்பதற்காக 12 சோதனை சாவடிகள்‌ முன்னேற்பாடாக அமைக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில்‌ 36 குழுக்கள்‌ ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும்‌ கேரளாமாநிலத்திலிருந்து கோழிகள்‌, முட்டைகள்‌மற்றும்‌ கோழிப்பண்ணைகள்‌ சார்ந்த பொருட்களை ஏற்றி வரும்‌ வாகனங்கள்‌ கண்காணிக்கப்பதோடு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே வாகனங்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாகன சோதனையின்போது கோழிகள்‌ மற்றும்‌ தீவனங்கள்‌ ஏற்றிச்‌ செல்லும்‌ வாகனங்களை , அலுவலர்கள்‌தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும்‌, சுகாதாரத்துறை அலுவலர்கள்‌ கோழிப்‌ பண்ணைகளில்‌ கோழிகளை கையாளும்‌ நபர்களிடம்‌ ஆய்வுக்குட்படுத்தி சோதனை மேற்கொள்ளவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு நோய்‌ ஏற்படும்‌ சமயங்களில்‌ நிலைமையை சமாளிக்கும்‌ பொருட்டு தேவையான 1200 தற்காப்பு கவசங்கள்‌, 838 உயிர்‌ தடுப்பு உபகரணங்கள்‌ தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் முழுவதும் பறவைக்‌ காய்ச்சல்‌ நோய்‌ ஏற்படாமல்‌ நிலைமையை முழுமையாக சமாளிக்கும்‌ பொருட்டு, தயாராக உள்ளதாகவும்‌, பொது மக்கள்‌ அச்சம்‌ கொள்ளத்‌ தேவையில்லை எனவும்‌ ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதில் இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்திட்ட இயக்குநர்‌ திரு.ரமேஷ்குமார்‌, உதவி இயக்குநர் ‌(பேரூராட்சிகள்‌) திரு.துவாரகநாத்சிங்‌, மண்டல இணை இயக்குநர்‌ (கால்நடை பராமரிப்புத்‌ துறை) மரு.பெருமாள்சாமி, துணை இயக்குநர்‌ (கால்நடை பெருக்கம்‌ மற்றும்‌ தீவன அபிவிருத்தி) மரு.இராகவன்‌, உதவி இயக்குநர் ‌( கால்நடை நோய்‌ புலனாய்வுப்‌ பிரிவு) மரு.கீதா. மற்றும்‌ கால்நடை மருத்துவர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...