கோவை: கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால், கோவையில் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பறவைக் காய்ச்சல் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சலை தடுக்க என்ன வழிமுறைகளை எல்லாம் மேற்கொள்ளவேண்டும் என விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்களை எடுத்து வருவதாக கூறினார். குறிப்பாக கோழிப்பண்ணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பம் சார்ந்த விபரங்களை கால்நடை பராமரிப்புத்துறையிடம் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பண்ணைகளில் வழக்கத்திற்கு மாறாக கோழிகள் இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டத்தில் பரவாமல் இருப்பதற்காக 12 சோதனை சாவடிகள் முன்னேற்பாடாக அமைக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் கேரளாமாநிலத்திலிருந்து கோழிகள், முட்டைகள்மற்றும் கோழிப்பண்ணைகள் சார்ந்த பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பதோடு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே வாகனங்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன சோதனையின்போது கோழிகள் மற்றும் தீவனங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை , அலுவலர்கள்தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும், சுகாதாரத்துறை அலுவலர்கள் கோழிப் பண்ணைகளில் கோழிகளை கையாளும் நபர்களிடம் ஆய்வுக்குட்படுத்தி சோதனை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு நோய் ஏற்படும் சமயங்களில் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு தேவையான 1200 தற்காப்பு கவசங்கள், 838 உயிர் தடுப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் முழுவதும் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்படாமல் நிலைமையை முழுமையாக சமாளிக்கும் பொருட்டு, தயாராக உள்ளதாகவும், பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்திட்ட இயக்குநர் திரு.ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.துவாரகநாத்சிங், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை) மரு.பெருமாள்சாமி, துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி) மரு.இராகவன், உதவி இயக்குநர் ( கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு) மரு.கீதா. மற்றும் கால்நடை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.