14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

கோவை: 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை: 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், வேலைப்பளு திணிப்பை கைவிட வேண்டும், ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் உள்ள தலைமை போக்குவரத்து பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பணிமனை முன்பு 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம் ஓய்வு பெறும் போது வழங்கப்படுவதில்லை எனவும் 2017ம் ஆண்டு அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் தீர்வு காணப்படும் என எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தும் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றனர்.

மேலும், போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் நஷ்டம் மற்றும் வருவாய் இழப்பை காரணம் காட்டி பேருந்துகள் நிறுத்தம் செய்யும் சூழல் உள்ளதாகவும் புதிய தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படாமல் வேலைப்பளு திணிப்பு நடைபெறுவதாக குற்றம்சாட்டினர். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தொழிற்சங்களை அழைத்துப் பேசி தீர்வு காண அரசும் நிர்வாகமும் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...