ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்

கோவை: கோவையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: கோவையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஏ.சி.சி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் உற்பத்தி சம்பந்தப்பட்ட இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, பணி நேரத்தை தாண்டி பணியாளர்களிடம் அதிக உழைப்பை பெறுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஏசிசி சிமெண்ட் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தொழிலாளர்களின் உரிமையை கேட்டால் ஆலை நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விடுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அலவன்சை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஏசிசி அண்ணா சிமெண்ட் தொழிலாளர் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் சின்னச்சாமி, ஏசிசி சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களில் 60 பேர் தான் உள்ளூர் தொழிலாளி பணிபுரிகின்றனர் என்றும் 600 பேர் வரை வெளிமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல் என்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து ஆலை நிர்வாகம் புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆலை நிர்வாகம் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...