வால்பாறையில் ஏகாம்பரேஸ்வரர் அன்னை காமாட்சி திருக்கல்யாண விழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கோவை: வால்பாறையில் பழமைவாய்ந்த அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் அன்னை காமாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கோவை: வால்பாறையில் பழமைவாய்ந்த அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் அன்னை காமாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பழமைவாய்ந்த காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 52வது ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று நவகிரஹ ஹோம பூஜையுடன் அம்மனுக்கு தீர்த்த அபிக்ஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.



முன்னதாக மேளதாள வாத்தியங்கள் முழங்க வால்பாறை ஸ்ரீ முருகன் கோவிலிருந்து கல்யாண சீர் வரிசை ஊர்வலமாக காமாட்சியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 



தென்சங்கம் பாளையம் சிவபால சிவாச்சாரியார் குழுவினர் அக்னி குன்டம் வளர்த்து ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரருக்கும் அன்னை காமாட்சிக்கும் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தீபாராதணை நடைபெற்றது. மதியம் அறுஞ்சுவை அன்னதானம் நடைபெற்றது. மாலை கோலாட்டம் கும்மி, ஜன்டை மேளம், சிங்காரிமேளம், தேவராட்டத்துடன் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலிருந்து மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச்சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...