ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஸ்டாலின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் - ஆதித்தமிழர் மக்கள் கட்சி

கோவை: தலித் சமுதாய மக்களையும், பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டந்தோறும் திமுக தலைவர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: தலித் சமுதாய மக்களையும், பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டந்தோறும் திமுக தலைவர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.



திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் 14ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக பதவி வகிக்க திமுக.தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும், ஊடகங்கள் குறித்து வெறுக்கத்தக்க விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சியினர் மற்றும் தலித் அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்.எஸ்.பாரதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் ஆர்.எஸ்.பாரதியின் உருவப்படத்தை கிழித்தெறிந்து கண்டனங்களை தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...