கோவை: கோவை மாவட்டத்தில் இந்து முன்னணியினர் மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் கடையடைப்பில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி கோவை மாநகர காவல்துறையினர் மாநகரம் முழுவதும் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல, பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டித்து அனைத்து ஜமாத் இஸ்லாமிய கூட்டியக்கத்தின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை மாநகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம், மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தயார் நிலையில் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் மாநகரம் முழுவதும் அணிவகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதில் காந்திபுரம் பகுதியில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தலைமையில் துணை ஆணையாளர் செல்வகுமார் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

அதேபோல, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையிலும், மாநகர மேற்கு பகுதியில் துணை ஆணையாளர் உமா தலைமையிலும், மாநகர கிழக்கு பகுதியில் துணை ஆணையாளர் முத்தரசு தலைமையிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் அதிவிரைவு படையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர்.