கோவை: கோவையில் நேற்று முன்தினம் நஞ்சுண்டாபுரம் அருகே இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் ஆனந்த்(33), இவர் நேற்று முன்தினம் இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியை கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஆனந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் தாக்குதல் நடத்திய நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருவதாக மாநகர காவல்துறை சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கோவை மாநகரில் மதக் கலவரங்கள் ஏற்படாமலிருக்க மாநகர் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்கள் யாரும் பொதுமக்களிடம் கடைகளை மூட வற்புறுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.