கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம்; 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

கோவை: கோவையில் நேற்று முன்தினம் நஞ்சுண்டாபுரம் அருகே இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவையில் நேற்று முன்தினம் நஞ்சுண்டாபுரம் அருகே இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் ஆனந்த்(33), இவர் நேற்று முன்தினம் இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியை கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஆனந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் தாக்குதல் நடத்திய நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருவதாக மாநகர காவல்துறை சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.



மேலும், கோவை மாநகரில் மதக் கலவரங்கள் ஏற்படாமலிருக்க மாநகர் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்து அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்கள் யாரும் பொதுமக்களிடம் கடைகளை மூட வற்புறுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...