என்ன அது - தலாக்., தலாக்., தலாக்..!


உலகில் பல மதங்களும், உள்ளபோதிலும் அதில் சில, வாழ்க்கைக்கான அடிப்படை தத்துவங்களை தன்னுள் வரையறுத்து வைத்துக்கொண்டிருக்கின்றன. இந்த வரையறைகள் மக்களை நல்வழிப் படுத்துவதற்காகவே வகுக்கப்பட்டவை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

அந்த வகையில் இஸ்லாம் மதமானது தன்னை தொடர்பவர்களை நெறிப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் பல கோட்பாடுகளை தன்னுள் கொண்டுள்ளது.  சில நேரங்களில் மதங்கள் நமக்கும் போதிக்கும் வாழ்வியலை  நம்மில் சிலர் தவறாக புரிந்துகொள்வதுண்டு.  அவ்வாறு சில மனிதர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே இந்த தலாக்.

தலாக்..!

அது என்ன தலாக் ? இது வரை கேள்விப்படாத வார்த்தையாக இருக்கிறதே என நினைப்பவர்களுக்கும். இந்த வார்த்தையை தவறாக புரிந்து, அதன் உண்மை தன்மையை அறியப்படும் நோக்கில் இந்த கட்டுரை பதியப்படுகிறது.

தலாக் என்ற  வார்த்தைக்கு விவாகரத்து என்பது பொருள். இஸ்லாமிய சமூகத்தை  ஒரு ஆண்மகன்  தனது  மனைவியுடன் கருத்துவேறுபாடு கொள்ளும்போதும், மனைவியுடன் வாழமுடியாது என்ற சூழ்நிலை ஏற்படும்போது தலாக் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி தனது பிரிந்து வாழும் விருப்பத்தை தெரிவிக்கிறான். 3 முறை தலாக் என்ற வார்த்தையை சொன்னால் போதும் கணவன், மனைவியை சுலபமாக பிரிந்து விடலாம் என்று அந்த வார்த்தையின் அர்த்தத்தை உணராதவர்கள் விமர்சிக்க, தலாக் என்ற வார்த்தையை உபயோகிக்க இஸ்லாமிய மதம் விதிக்கும் கட்டுப்பாடுகளை, நமக்கு எடுத்துரைக்கிறாய்  ஜாம-அத் உலமா அமைப்பின் கோவை மண்டல தலைவர் அப்துல் ரஹீம்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோர் ஷரியத் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்களாவர். இந்த ஷரியத் சடடத்தில் தலாக் என்ற வார்த்தையை உபயோகித்து ஒரு ஆண்மகன் தனது மனைவியை பிரிந்துகொள்ளலாம். ஆனால் இந்த வார்த்தையை பலர் தவறாக கருதுகின்றனர். 3 முறை தலாக் சொல்லிவிட்டால் மனைவியை கணவன் பிரிந்துவிடலாம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஷரியத் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது. தலாக் என்ற  வார்த்தை இறைவனை கோபபமுறுத்தும் வார்த்தையாக கருதப்படுகிறது. பொதுவாக கணவன் மனைவி இடையே கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் ஏற்படும்போதோ, அல்லது கணவன் மனைவியை பிரிய முற்பட்டாலோ அவன் தலாக் வார்த்தையை உபயோகிக்க முடியும். ஆனால் அந்த வார்த்தையை ஒருமுறை உபயோகிக்கும் முன் அந்த ஆண்  இரு வீடு பெரியவர்களிடமும் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். தலாக் சொன்ன 3 மாதகாலத்திற்க்கு கணவனை விட்டு மனைவி பிரிந்திருக்க வேண்டும். அந்த மூன்று மாத காலத்திற்குள் கணவன் மனைவி மீண்டும் சேர வாய்ப்புள்ளது.

இதுபோன்ற பல விதிமுறைகள் இந்த தலாக் வார்த்தையை உபயோக்கும் முன் பின்பற்றப்பட வேண்டியுள்ளது.

இஸ்லாமிய மதம் ஆண்  பெண் இருபாலரையும் சமமாக கருதும் ஒரு மதம். ஒரு ஆணுக்கு உள்ள உரிமை பெண்ணுக்கும் உண்டு. பெண் ஒருவள் தன் கணவனை பிரிந்துவாழ நினைக்கும் போது அவள் 'குலாஹ்' என்ற வார்த்தையை உபயோகிக்க முடியும். ஒரு ஆணுக்கு உள்ள நிபந்தனைகள் போலவே பெண்ணுக்கும் நிபந்தனைகள் பல உண்டு. எடுத்த எடுப்பில் ஒரு திருமண பந்தத்தை முடித்து வைத்துவிட இஸ்லாம் அனுமதிக்காது. அதனால், தலாக் குறித்த, குறைந்த பட்ச புரிதல் உள்ளவர்கள் அதை தவறாக உபயோகிக்கவோ, அல்லது விமர்சிப்பதோ இனி வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...