கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 500 கிலோ மீன்கள் பறிமுதல்

கோவை: கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அதிகாரிகள் 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் மற்றும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அதிகாரிகள் 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் மற்றும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் பார்மலின் மற்றும் கெட்டுப்போன மீன்களை வியாபாரிகள் பொது மக்களுக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை மேற்கொள்வதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மீன் மார்க்கெட்டில் இருந்து 70 கிலோ பார்மலின் தடவிய மீன்கள் மற்றும் 430 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை அங்கே அழித்தனர்.

பின்னர் கடைக்காரர்களிடம், மொத்த வியாபாரிகளிடமும் அதிகாரிகள் கூறுகையில், பொது மக்களுக்கு கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...