கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மீது தாக்குதல்; போலீசார் குவிப்பு

கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் ஆனந்த்(33), இன்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கோவை நஞ்சுண்டாபுரம் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள பாலத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்திருந்த இரும்பு கம்பியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஆனந்தின் தலை, முதுகு மற்றும் பல்வேறு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றனர்.

இந்தநிலையில் சுதாரித்துக் கொண்ட ஆனந்த் உடனடியாக அவருடைய நண்பர் ஹரிக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் நண்பர், அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் ஆனந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். 



இதையடுத்து தகவலறிந்து வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 



அதேபோல கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் மேல்சிகிச்சைக்காக பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு பிஎஸ்ஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...