நீலகிரியில் உள்ள அணைகளின் அவசர கால நடவடிக்கை திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்

நீலகிரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் குந்தா படுகையில் அமைந்துள்ள போர்த்தி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா மற்றும் பெகும்பஹள்ளா அணைகளின் அவசர கால நடவடிக்கை திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் இன்று நடைபெற்றது.

நீலகிரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் குந்தா படுகையில் அமைந்துள்ள போர்த்தி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா மற்றும் பெகும்பஹள்ளா அணைகளின் அவசர கால நடவடிக்கை திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நீர்வள ஆணையத்தின் முதன்மை பொறியாளர் குல்ஷன் ராஜ், உலக வங்கி உதவியுடன் தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 223 அணைகள் முதல் கட்டமாக 3486 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதையடுத்து, இரண்டாம் கட்டமாக 736 அணைகள் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறினார். மேலும், சீனா, அமெரிக்கா நாடுகளையடுத்து இந்தியாவில் அதிகப்படியாக 5700 அணைகள் உள்ளதாகவும் தற்போது புதிதாக 411 அணைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் 77 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, அணைகள் நிரம்பிய போது மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட அவசர கால நடவடிக்கை திட்டத்தினால் இழப்புகள் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக கூறினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் இயக்குநர் எத்திராஜ், உலக வங்கி ஆலோசகர் அஜித் குமார் பட்நாயக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...