கோவை: குடியுரிமை சட்ட திருத்ததிற்கு ஆதரவாக கோவையில் பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோவை: குடியுரிமை சட்ட திருத்ததிற்கு ஆதரவாக கோவையில் பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகில் பா.ஜ.க, இந்து முன்னணி, பரிவார் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சிஏஏ ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட அதன் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கோவை மாநகரில் தொடர் போராட்டம் நடத்துவதற்கு இந்து இயக்கங்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறி உள்ள போதும், தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் போராட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடத்தபடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவக்கின்றனர். இதோடு முதல்வர் மற்றும் பிரதமரை தரக்குறைவாக பேசியும் போராட்டத்தினை சிஏஏ எதிர்ப்பாளர்கள் நடத்திவருகின்றனர்.

எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கப்படவும், மத நல்லிணக்கம் தொடர வேண்டும் எனில் தமிழக அரசும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சி.ஏ.ஏ.விற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால், வன்முறையை தமிழக அரசே ஏற்படுத்தி தருகிறதோ? என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.