கோவையில் சிஏஏக்கு ஆதரவான தொடர் போராட்டம் ; தமிழக அரசு சிஏஏ எதிர்ப்பு போரட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என கோரிக்கை

கோவை: குடியுரிமை சட்ட திருத்ததிற்கு ஆதரவாக கோவையில் பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


கோவை: குடியுரிமை சட்ட திருத்ததிற்கு ஆதரவாக கோவையில் பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகில் பா.ஜ.க, இந்து முன்னணி, பரிவார் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

சிஏஏ ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்ட அதன் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கோவை மாநகரில் தொடர் போராட்டம் நடத்துவதற்கு இந்து இயக்கங்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  குடியுரிமை சட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறி உள்ள போதும், தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் போராட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடத்தபடுவதாகவும் தெரிவித்தார்.



மேலும் இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவக்கின்றனர். இதோடு முதல்வர் மற்றும் பிரதமரை தரக்குறைவாக பேசியும் போராட்டத்தினை சிஏஏ எதிர்ப்பாளர்கள் நடத்திவருகின்றனர்.



எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கப்படவும், மத நல்லிணக்கம் தொடர வேண்டும் எனில் தமிழக அரசும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சி.ஏ.ஏ.விற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால், வன்முறையை தமிழக அரசே ஏற்படுத்தி தருகிறதோ? என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...