கோவை: தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம், கோவை மாவட்ட சமூக நலத்துறை சார்பில், "பிரைடு வாக்"- இருளில் அச்சமில்லாமல் நடைபோடு பெண்ணே என்ற தலைப்பில் முதல்முறையாக இரவு நேரத்தில் பெண்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நடைபேரணி கோவையில் இன்று நடைபெற்றது.

பெண்கள் இரவு நேரத்தில் தைரியமாக செல்ல வேண்டும், அதற்கான பாதுகாப்பினை சமுகத்தில் உள்ள அனைவரும் அளிக்க வேண்டும், மேலும் எந்த நேரமும் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் பெண்கள் செல்லலாம் என்ற கருத்தினை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாகவும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சமுதாய பிரச்சனை ஏதும் பெண்களுக்கு வரக்கூடாது, இரவு நேரத்தில் வெளியில் செல்லும் பெண்களுக்கு மற்றவர்கள் எந்த துன்புறுத்தல் கொடுக்க கூடாது, சமுதாயத்தில் இருட்டும் முன் பெண்கள் வீட்ற்குள் சென்று விட வேண்டும் என்ற நிலை பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைகிறது, என தெரிவித்தனர்.
இதனை போக்கும் விதமாகவும், இரவு நேரத்தில் பெண்கள் தைரியமாக வெளியில் செல்லலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே இந்த பேரணி நடைபெற்றதாக பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதில் அனைத்து துறை பெண் அலுவலர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.