"இருளில் அச்சமில்லாமல் நடைபோடு பெண்ணே", பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கோவையில் விழிப்புணர்வு நடைபயணம்

கோவை: தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம், கோவை மாவட்ட சமூக நலத்துறை சார்பில், "பிரைடு வாக்"- இருளில் அச்சமில்லாமல் நடைபோடு பெண்ணே என்ற தலைப்பில் முதல்முறையாக இரவு நேரத்தில் பெண்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நடைபேரணி கோவையில் இன்று நடைபெற்றது.


கோவை: தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம், கோவை மாவட்ட சமூக நலத்துறை சார்பில், "பிரைடு வாக்"- இருளில் அச்சமில்லாமல் நடைபோடு பெண்ணே என்ற தலைப்பில் முதல்முறையாக இரவு நேரத்தில் பெண்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நடைபேரணி கோவையில் இன்று நடைபெற்றது.



பெண்கள் இரவு நேரத்தில் தைரியமாக செல்ல வேண்டும்,  அதற்கான பாதுகாப்பினை சமுகத்தில் உள்ள அனைவரும் அளிக்க வேண்டும், மேலும் எந்த நேரமும் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் பெண்கள் செல்லலாம் என்ற கருத்தினை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாகவும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



சமுதாய பிரச்சனை ஏதும் பெண்களுக்கு வரக்கூடாது, இரவு நேரத்தில் வெளியில் செல்லும் பெண்களுக்கு மற்றவர்கள் எந்த துன்புறுத்தல் கொடுக்க கூடாது,  சமுதாயத்தில் இருட்டும் முன் பெண்கள் வீட்ற்குள் சென்று விட வேண்டும் என்ற நிலை பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைகிறது, என தெரிவித்தனர்.

இதனை போக்கும் விதமாகவும், இரவு நேரத்தில் பெண்கள் தைரியமாக வெளியில் செல்லலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே இந்த பேரணி நடைபெற்றதாக பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதில் அனைத்து துறை பெண் அலுவலர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...