கோவை: கோவை மாநகராட்சியில் 93.50 இலட்ச ரூபாய் மதிப்பிலான சமுதாய நலக்கூடத்தினை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.93 இடையர்பாளையம் பெரியார் நகா் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.93.50 இலட்சம் மதிப்பில் அம்மா சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று ஊரக வளர்ச்சி மற்றும்அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழச்சியில் பேசிய அமைச்சர், கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் 93.50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அம்மா சமுதாய நலக்கூடம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் சமையல் கூடம், உணவருந்தும் இடம், வரவேற்பு கூடம், மணமகன் மற்றும் மணமகள் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் மொத்தம் 4563 சதுரடி பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தை பொதுமக்கள் தூய்மையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி வார்டு எண்.93 ல் உள்ள மராம் காலனி பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 38.00 இலட்சம் ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை போடும் விழாவிலும் அமைச்சர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா்திரு.ஷரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி,மாநகரப் பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன் அவர்கள், தெற்குமண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி அவர்கள், மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.