கோவையில் 93 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக திறக்கப்பட்ட சமுதாய கூடத்தினை மக்கள் தூய்மையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை மாநகராட்சியில் 93.50 இலட்ச ரூபாய் மதிப்பிலான சமுதாய நலக்கூடத்தினை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியில் 93.50 இலட்ச ரூபாய் மதிப்பிலான சமுதாய நலக்கூடத்தினை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.93 இடையர்பாளையம்‌ பெரியார்‌ நகா்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொதுநிதியின்‌ கீழ்‌ ரூ.93.50 இலட்சம்‌ மதிப்பில் அம்மா சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று ஊரக வளர்ச்சி மற்றும்‌அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி திறந்து வைத்தார். 

இந்த திறப்பு விழா நிகழச்சியில் பேசிய அமைச்சர், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பொதுநிதியின் கீழ்‌ 93.50 இலட்சம்‌ ரூபாய் மதிப்பிலான அம்மா சமுதாய நலக்கூடம்‌ பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தரைதளம்‌ மற்றும்‌ முதல்‌ தளத்தில்‌ சமையல்‌ கூடம்‌, உணவருந்தும்‌ இடம்‌, வரவேற்பு கூடம்‌, மணமகன்‌ மற்றும்‌ மணமகள்‌ அறை, ஆண்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ கழிப்பறை ஆகிய வசதிகளுடன்‌ மொத்தம்‌ 4563 சதுரடி பரப்பளவில்‌ மக்கள்‌ பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தை பொதுமக்கள்‌ தூய்மையாக பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும்‌ என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி வார்டு எண்‌.93 ல் உள்ள மராம்‌ காலனி பகுதியில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து 38.00 இலட்சம்‌ ரூபாய் மதிப்பில்‌ உள்விளையாட்டு அரங்கம்‌ அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜை போடும் விழாவிலும் அமைச்சர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌திரு.ஷரவன்குமார்‌ ஜடாவத்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.ச.பிரசன்னா ராமசாமி,மாநகரப்‌ பொறியாளர்‌ திரு.ஆ.லட்சுமணன்‌ அவர்கள்‌, தெற்குமண்டல உதவி ஆணையர்‌ தி.ரா.ரவி அவர்கள்‌, மற்றும்‌ அலுவலர்கள்‌, ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...