சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய அமைப்பு துவக்கம்

கோவை: பின்தங்கிய மக்கள் முன்னேற்றத்திற்காக டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை அமைப்பு இன்று முதல் தொடங்கப்படுவதாக கோவையில் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் ராவ் அறிவித்தார்.

கோவை: பின்தங்கிய மக்கள் முன்னேற்றத்திற்காக டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை அமைப்பு இன்று முதல் தொடங்கப்படுவதாக கோவையில் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் ராவ் அறிவித்தார்.

 



கோவை சுந்தராபுரம் உள்ள செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு போயர் சமுதாயத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர் ராம் மோகன் ராவ், தமிழகத்திலுள்ள ரெட்டியார் செட்டியார் யாதவர் ,நாயுடு, நாயக்கர் பிராமணர் அருந்ததியர் என பல்வேறு சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை ஏற்படுத்த உள்ளோம். அரசியல் அதிகாரத்தில் இதுவரை பங்கேற்பு ஏதும் பெற முடியாத மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு மிகப்பெரிய சமுதாய அமைப்பை உருவாக்க திட்டமிட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி எல்லா மக்களுக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். திருவள்ளுவர். வள்ளலார். காந்தியடிகள். தந்தை பெரியார். டாக்டர் அம்பேத்கார். ராம் மனோகர் லோகியா. போன்ற மகத்தான சிந்தனையாளர்களை உள்வாங்கி இந்த நவீன காலத்திற்கு ஏற்ப செயல்திட்டங்களை உருவாக்கப்படும், இதற்காக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து சமுதாய ஒருங்கிணைப்பு உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை அமைப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் செயல்படும் எனவும் அறிவித்தார்.

 இந்த மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் பூபதி தலைமை தாங்கினார், கொள்கை பரப்பு செயலாளர் சௌந்தரராஜன் , மாநில நிர்வாகிகள் நாகராஜ், சிவகுமார், தாமோதரன், சிங்கை கோபாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கோவை ,திருப்பூர், நீலகிரி ,சேலம் ,கரூர் நாமக்கல் ,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போயர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மையினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...