திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு என்ற பெயரில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் இந்து முன்னணியின் தொடர் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், திருப்பூரில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் இன்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், டெல்லியை போல தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்து முன்னணி திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பள்ளியை ஆக்கிரமித்து, பெரிய பந்தல்கள் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், உலக அளவில் பின்னலாடை வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் திருப்பூரில் வன்முறைகள் நிகழ்ந்தால் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், திருப்பூரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்திலும் மனு அளிப்பதாக தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்து கொண்டன.