குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொய்யான பரப்புரை செய்யும் திமுக - பா.ஜ.க மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் கண்டன பேரணி

கோவை: கோவையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் இன்று கோவையில் பேரணி நடைபெற்றது.



கோவை: கோவையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் இன்று கோவையில் பேரணி நடைபெற்றது.

காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து 100 ஐக்கும் மேற்பட்ட வாகனங்களில் பா.ஜ.கவினர் செஞ்சிலுவை சங்கம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அனுமதி இல்லாத இடத்தில் எல்லாம் தன்னிச்சையாக போராட்டம் என்கிற பெயரில் போராட்டம் நடத்தி வருவதாகவும் இந்த போராட்டங்கள் எல்லாம் தடுக்கபட வேண்டும் எனவும் காவல்துறையும், மாநில அரசும் முன்வர வேண்டும், இல்லையெனில், நாங்களும் அதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். 



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தைக் வன்முறை களமாக மாற்ற முயற்ச்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், இது குறித்து தெளிவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார் எனவும் தெரிவித்தார். 

குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க தயாரா ? என்று  ஸ்டாலினுக்கு தேசிய செயலாளர் முரளிதர ராவ் அழைப்பு விடுத்துள்ளார் என குறிப்பிட்ட வானதி சீனிவாசன், ஆனால் ஸ்டாலின் விவாதிக்க தயாராக இல்லை என்றார். 



பின்னர், செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பா.ஜ.க பேரணியையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...