கோவை: கோவையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் இன்று கோவையில் பேரணி நடைபெற்றது.
கோவை: கோவையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் இன்று கோவையில் பேரணி நடைபெற்றது.
காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து 100 ஐக்கும் மேற்பட்ட வாகனங்களில் பா.ஜ.கவினர் செஞ்சிலுவை சங்கம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அனுமதி இல்லாத இடத்தில் எல்லாம் தன்னிச்சையாக போராட்டம் என்கிற பெயரில் போராட்டம் நடத்தி வருவதாகவும் இந்த போராட்டங்கள் எல்லாம் தடுக்கபட வேண்டும் எனவும் காவல்துறையும், மாநில அரசும் முன்வர வேண்டும், இல்லையெனில், நாங்களும் அதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தைக் வன்முறை களமாக மாற்ற முயற்ச்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், இது குறித்து தெளிவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க தயாரா ? என்று ஸ்டாலினுக்கு தேசிய செயலாளர் முரளிதர ராவ் அழைப்பு விடுத்துள்ளார் என குறிப்பிட்ட வானதி சீனிவாசன், ஆனால் ஸ்டாலின் விவாதிக்க தயாராக இல்லை என்றார்.

பின்னர், செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பா.ஜ.க பேரணியையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
