டெல்லி கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: டெல்லி கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: டெல்லி கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டங்களின் போது கலவரம் வெடித்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அக்கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை கண்டித்து கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



அப்போது, மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், நீதிமன்றம் உத்தரவிட்டும் பாஜக தலைவர்கள் மீது டெல்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் கலவரத்திற்கு காரணமான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...