கோவையில் தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிற்சங்க தலைவர் கைது

கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பெண் துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை அளித்த துப்புரவு தொழிலாளர் சங்க தலைவர் ஜோதியை பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பெண் துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை அளித்த துப்புரவு தொழிலாளர் சங்க தலைவர் ஜோதியை பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வரதராஜபுரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவமனையில் பணிபுரியும் 32 வயதான பெண் தொழிலாளி வழக்கம் போல கழிவறை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளார்.. அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சக ஊழியரும், துப்புரவு தொழிலாளர் சங்க தலைவருமான ஜோதி, பெண் தொழிலாளி சுத்தம் செய்து வரும் கழிவறைக்குள் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் சத்தமிட்டு அலறிய சத்தம் கேட்டு வந்தவர்கள் ஜோதியினை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிப்புக்குள்ளாகிய பெண், சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்துள்ளார். புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி, கொடும் காயம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோதியை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த சூழலில் தற்போது பெண் துப்புரவு தொழிலாளியை தொழிற்சங்க தலைவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொழிலாளர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...