ஆர்எஸ்எஸ் அமைப்பை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டம்

கோவை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் துப்பாக்கியோடு கலவரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் துப்பாக்கியோடு கலவரத்தில் ஈடுபட்டனர்.



அவர்களைத் தடுக்காமல் அங்கிருந்த போலீசார் அமைதியாக இருந்தமைக்கும் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச்சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் குனியமுத்தூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 



முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் அபுதாஹீர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்த சில குண்டர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவிடாமல் தடுத்தனர் எனவும், இந்து முஸ்லிம் மக்களிடையே மதரீதியான பிரச்சனையை தூண்டி விடவே இதுபோன்ற துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இல்லை என்றால் மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தையும் முற்றுகையிட உள்ளதாகவும் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...