தொண்டாமுத்தூர்‌ தொகுதியில் புதிய பணிகளுக்கு பூமி பூஜை; அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்‌

கோவை: கோவை மாவட்டம்‌, தொண்டாமுத்தூர்‌ தொகுதிக்குட்ட பூலுவப்பட்டி, ஆலந்துறை பேரூராட்சி பகுதிகளில்‌ இன்று (25.02.2020) நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌, தொண்டாமுத்தூர்‌ தொகுதிக்குட்ட பூலுவப்பட்டி, ஆலந்துறை பேரூராட்சி பகுதிகளில்‌ இன்று (25.02.2020) நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ (தெற்கு) தனலிங்கம்‌, உதவி இயக்குநர்‌(பேரூராட்சிகள்‌) துவாரகநாத்சிங்‌, வட்டாட்சியர்‌ (பேரூர்‌) ராதாகிருஷ்ணன்‌, உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ அவர்களால்‌, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டம்‌, மேம்படுத்தப்பட்ட சாலைகள்‌, காந்திபுரம்‌ முதலடுக்கு மற்றும்‌ இரண்டாம்‌ அடுக்கு மேம்பாலங்கள்‌, வெள்ளலூர்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌, அத்திக்கடவு அவினாசி குடிநீர்‌ திட்டம்‌ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தில்‌ 50 ஆண்டுகளில்‌ இல்லாத வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது.

நகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ அனைத்து பேரூராட்சி மற்றும்‌ ஊராட்சி பகுதிகளில்‌, சாலை, குடிநீர்‌, சிறுபாலங்கள்‌, பள்ளி வகுப்பறை கட்டிடங்கள்‌, கழிப்பறைகள்‌, அங்கன்வாடி மைய கட்டிடங்கள்‌ போன்றவற்றை சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தியுள்ளார்‌.

அதன்படி, இன்று பூலுவப்பட்டி பேரூராட்சியில்‌ 60 திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பில்‌ சந்தையை மேம்பாடு செய்யும்‌ பணிக்கும்‌, ரூ.40 லட்சம்‌ மதிப்பில்‌ சமுதாயக்கூடம்‌ மேம்பாடு செய்யும்‌ பணிக்கும்‌, வெள்ளிமேடு, மோளப்பாளையம்‌, வடிவேலாம்பாளையம்‌, நாதேகவுண்டன்புதூர்‌ பகுதிகளில்‌ தலா ரூ.50 லட்சம்‌ மதிப்பில்‌ ஊரணி மேம்பாடு செய்யும்‌ பணிகளுக்கும்‌, IUDM திட்டத்தில்‌ கீழ்‌ ரூ.49.95 லட்சம்‌ மதிப்பில்‌ இராமநாதபுரம்‌, கூத்தாண்டவர்‌ வீதியில்‌ தார்சாலை, கான்கிரீட்‌ சாலை, வடிகால்‌, மற்றும்‌ மேட்டுவலவு பகுதியில்‌ தடுப்புச் சுவர்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, 14வது நிதிக்குழு மானியம்‌ திட்டத்தின்‌ கீழ்‌. ரூ.45 லட்சம்‌ மதிப்பில்‌ 15-வது வார்டில்‌ சாலையை மேம்பாடு செய்யும்‌ பணிக்கும்‌, ஆலாந்துறை பேரூராட்சியில்‌ நபார்டு திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பில்‌ காளிமங்கலம்‌ முதல்‌ முகாசிமங்கலம்‌ வரை தார்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, காளிமங்கலம்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம்‌ மதிப்பில்‌ 30000 லிட்டர்‌ கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும்‌ பணிக்கும்‌, ரூ.10 லட்சம்‌ மதிப்பில்‌ கழிப்பறை அமைக்கும்‌ பணிக்கு அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.

மேலும், ரூ.8 லட்சம்‌ மதிப்பில்‌ அங்கன்வாடி கட்டிடம்‌ கட்டும்‌ பணிக்கும்‌, வலையன்குட்டை பகுதியில்‌ ரூ.8.50 லட்சம்‌ மதிப்பில்‌ அங்கன்வாடி கட்டிடம்‌ கட்டும்‌ பணிக்கும்‌, IUDM திட்டத்தில்‌ கீழ்‌ ரூ.88.70 லட்சம்‌ மதிப்பில்‌ வலையன்குட்டை பிரிவு முதல்‌ மூங்கில்மடை குட்டை வரை தார்சாலை, மற்றும்‌ மனரியகாரன்‌ குட்டை அருகில்‌ கான்கிரீட்‌ சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, ரூ.62.50 இலட்சம்‌ மதிப்பில்‌ காவல்‌ நிலைய சாலை முதல்‌ மூலத்தோட்டம்‌ வரை தார்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, ரூ.32 இலட்சம்‌ மதிப்பில்‌ பெருமாள்‌ கோவில்பதி ரோடு முதல்‌ பச்சினம்பதி வரை தார்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌, ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.1.18 கோடி மதிப்பில்‌ 14வது வார்டு பெருமாள்கோவில்பதியில்‌ பாலம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, 14வது நிதிக்குழு மானியம்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பில்‌ 13வது வார்டு ரிலையன்ஸ்‌ நகர்‌ பகுதியில்‌ உள்ள சாலையை மேம்பாடு செய்யும்‌ பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்‌.

அதனைத்தொடர்ந்து, ஆலாந்துறை பேரூராட்சியில்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம்‌ மதிப்பில்‌ அமைக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி திறந்து வைத்தார்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...