கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்ட பூலுவப்பட்டி, ஆலந்துறை பேரூராட்சி பகுதிகளில் இன்று (25.02.2020) நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன் வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், வட்டாட்சியர் (பேரூர்) ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களால், ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் முதலடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அத்திக்கடவு அவினாசி குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், சாலை, குடிநீர், சிறுபாலங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றை சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தியுள்ளார்.
அதன்படி, இன்று பூலுவப்பட்டி பேரூராட்சியில் 60 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் சந்தையை மேம்பாடு செய்யும் பணிக்கும், ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் மேம்பாடு செய்யும் பணிக்கும், வெள்ளிமேடு, மோளப்பாளையம், வடிவேலாம்பாளையம், நாதேகவுண்டன்புதூர் பகுதிகளில் தலா ரூ.50 லட்சம் மதிப்பில் ஊரணி மேம்பாடு செய்யும் பணிகளுக்கும், IUDM திட்டத்தில் கீழ் ரூ.49.95 லட்சம் மதிப்பில் இராமநாதபுரம், கூத்தாண்டவர் வீதியில் தார்சாலை, கான்கிரீட் சாலை, வடிகால், மற்றும் மேட்டுவலவு பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்கும், 14வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ். ரூ.45 லட்சம் மதிப்பில் 15-வது வார்டில் சாலையை மேம்பாடு செய்யும் பணிக்கும், ஆலாந்துறை பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் காளிமங்கலம் முதல் முகாசிமங்கலம் வரை தார்சாலை அமைக்கும் பணிக்கும், காளிமங்கலம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கும், ரூ.10 லட்சம் மதிப்பில் கழிப்பறை அமைக்கும் பணிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மேலும், ரூ.8 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கும், வலையன்குட்டை பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கும், IUDM திட்டத்தில் கீழ் ரூ.88.70 லட்சம் மதிப்பில் வலையன்குட்டை பிரிவு முதல் மூங்கில்மடை குட்டை வரை தார்சாலை, மற்றும் மனரியகாரன் குட்டை அருகில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.62.50 இலட்சம் மதிப்பில் காவல் நிலைய சாலை முதல் மூலத்தோட்டம் வரை தார்சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.32 இலட்சம் மதிப்பில் பெருமாள் கோவில்பதி ரோடு முதல் பச்சினம்பதி வரை தார்சாலை அமைக்கும் பணிக்கும், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.18 கோடி மதிப்பில் 14வது வார்டு பெருமாள்கோவில்பதியில் பாலம் அமைக்கும் பணிக்கும், 14வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் 13வது வார்டு ரிலையன்ஸ் நகர் பகுதியில் உள்ள சாலையை மேம்பாடு செய்யும் பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆலாந்துறை பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.