கோத்தகிரி காய்கறி மார்கெட் பகுதியில் உலா வரும் காட்டெருமை; வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காய்கறி மார்கெட் பகுதியில் காட்டெருமை புகுந்ததால் அச்சமடைந்துள்ள வியாபாரிகள் காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காய்கறி மார்கெட் பகுதியில் காட்டெருமை புகுந்ததால் அச்சமடைந்துள்ள வியாபாரிகள் காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகவே உள்ளது. குறிப்பாக, காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளான, மஞ்சூர், குந்தா, தூதர்மட்டம், சேலாஸ் போன்ற பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனே வெளியே சென்று வரும் நிலை உள்ளது.

மேலும், தேயிலை தோட்டங்களிலும், விவசாயம் செய்யும் நிலங்களிலும் வன விலங்குகளால் சேதம் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் வனப்பகுதியில் உள்ள சாலை வழியே பணிக்குச் செல்லும் போது வன விலங்குகள் தாக்குதலுக்கு ஆளாவதோடு உயிர் சேதமும் ஏற்படுகிறது.

இந்நிலையில் கோத்தகிரி, காய்கறி மார்கெட்டில் புகுந்த ஒற்றை காட்டெருமை அங்கிருந்த காய்கறி கூடைகளில் இருந்து காய்கறிகளை பாெருமையாக உண்டு சென்றது. அப்போது குச்சியால் விரட்ட முயன்ற காய்கறி கடைக்காரரை தாக்கவும் முயன்றதன் காரணமாக சிலர் தங்களது காய்கறி கடைளை மூட துவங்கினர். சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை பின்பு அங்கிருந்து சென்றது.

பெரும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் இந்த ஒற்றை காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...