மதுக்கரையில் மனித - வனவிலங்கு மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி விவசாயிகள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

கோவை: கோவை அடுத்த மதுக்கரையில் மனித - வனவிலங்கு மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை அடுத்த மதுக்கரையில் மனித - வனவிலங்கு மோதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 



மேற்கு புறவழிச்சாலை கோவை - கரூர் புறவழிச்சாலை, கோவை வட்டச்சாலை ஆகிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் உயிர் சேதங்களைத் தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.



மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...