மேட்டுப்பாளையத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 24 மணி நேர அறுசுவை அன்னதான திட்டம்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடாது செயல்படும் அறுசுவை அன்னதான திட்டம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

கோவை: மேட்டுப்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 72வது பிறந்தநாளை முன்னிட்டு 24 மணி நேர இடைவிடாது செயல்படும் அறுசுவை அன்னதான திட்டம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அம்மா பேரவை அ.தி.மு.க சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இன்று ஒருநாள் மட்டும் 24 மணிநேரமும் செயல்படும் அறுசுவை உணவு இடைவிடாத அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.

இத்திட்டம் மூலம் இன்று காலை முதலே பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இட்லி, கிச்சடி, கேசரி, வடை, அரிசி சாதம் போன்ற அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. காலை, மதியம், இரவு என அன்னதான தொடர்ந்து இடைவிடாது வழங்கப்படுகிறது.

இந்த அன்னதான திட்டத்தை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் மற்றும் அம்மா பேரவை கோவை மாவட்ட செயலாளர் நாசர் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் பங்கேற்று உணவருந்தினர்.



முன்னதாக அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேட்டுப்பாளையம் - உதகை முக்கிய சாலையில் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...