கோவை: திமுக கூட்டணி கட்சிகள் பெற்ற இரண்டு கோடிக்கு கையெழுத்தை விட அதிகமான மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவினால் யாருக்கும் பாதிப்பில்லை, என பல்லடத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பாஜக சார்பில் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பி.ஜே.பி சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் வடுகபாளையத்தில் துவங்கி பல்லடத்தின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று என்.ஜி.ஆர் சாலையில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் பி.ஜே.பி நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பொது கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்ற இரண்டு கோடி கையெழுத்தை விட அதிகமான மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா எந்த ஒரு தனி நபருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அல்ல எனவும் அதேவேளையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஜனநாயக விரோதத்தை ஏற்படுத்தக் கூடிய சில அமைப்புகளோடு சேர்ந்து வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக போராட்டத்தை தூண்டி விட்டு வருவதாக சாடினார்.

"அதைவிடுத்து நியாயமான முறையில் கருத்துக்களை தெரிவிக்கவும் விவாதங்களை நடத்தவும் பாஜக தயாராக உள்ளது", என தெரிவித்தார்.