குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்லடத்தில் பாஜக சார்பில் பேரணி

கோவை: திமுக கூட்டணி கட்சிகள் பெற்ற இரண்டு கோடிக்கு கையெழுத்தை விட அதிகமான மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவினால் யாருக்கும் பாதிப்பில்லை, என பல்லடத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.



கோவை: திமுக கூட்டணி கட்சிகள் பெற்ற இரண்டு கோடிக்கு கையெழுத்தை விட அதிகமான மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவினால் யாருக்கும் பாதிப்பில்லை, என பல்லடத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்தார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று  பாஜக சார்பில் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பி.ஜே.பி சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் வடுகபாளையத்தில் துவங்கி பல்லடத்தின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று என்.ஜி.ஆர் சாலையில்  நிறைவடைந்தது.



இந்த பேரணியில் பி.ஜே.பி நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பொது கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்ற இரண்டு கோடி கையெழுத்தை விட அதிகமான மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதா எந்த ஒரு தனி நபருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அல்ல எனவும் அதேவேளையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஜனநாயக விரோதத்தை ஏற்படுத்தக் கூடிய சில அமைப்புகளோடு சேர்ந்து வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக போராட்டத்தை தூண்டி விட்டு வருவதாக சாடினார். 



"அதைவிடுத்து நியாயமான முறையில் கருத்துக்களை தெரிவிக்கவும் விவாதங்களை நடத்தவும் பாஜக  தயாராக உள்ளது", என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...