மேட்டுப்பாளையத்தில் மீண்டும் சிறுத்தை புலி அட்டகாசம்; பகலிலேயே கால்நடைகளை வேட்டையாடிவருவதால் மக்கள் அச்சம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராமங்களில் மீண்டும் சிறுத்தை புலி அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராமங்களில் மீண்டும் சிறுத்தை புலி அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையால் அந்த கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடாமல் இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர். 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜந்து ஆடுகள் ஒரு பசுமாடு என தொடர்ந்து வேட்டையாடி வரும் அந்த சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறை உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தொடர் கோரிக்கை வைத்துள்ளனர். 

சமீபத்தில், சிட்டேப்பாளையம் கிராமத்தில் நுழைந்த அந்த சிறுத்தைப்புலி, பசு, ஆடுகள், வளர்ப்பு நாய்கள் என வேட்டையாடி கொன்றது.

இந்தநிலையில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் சிட்டேப்பாளையம் பகுதியில் இரண்டு கூண்டுகள் வைக்கபட்டுள்ளன. ஆனாலும், இந்த கூண்டுகளில் சிக்காத சிறுத்தை அதன் அருகே உள்ள இடுகம்பாளையம், ஆத்திகுட்டை கிராமத்தில் நுழைந்து இன்று இரண்டு ஆடுகளை வேட்டையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



ஆத்திகுட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது ஆட்டினை இன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் அங்கிருந்த சிறுத்தை புலி அதனை அடித்து கொன்றது.

இதேபோல், நேற்று இரவு இடுகம்பாளையம் பெருமாள் கோவில் பகுதியில் நாச்சிமுத்து என்பவரது ஆட்டினையும் சிறுத்தை அடித்து கொன்றுள்ளது.

இதுவரை இரவு நேரங்களில் வந்த சிறுத்தை தற்போது பகலிலேயே கால்நடைகளை வேட்டையாடிவதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து கிராமங்களை நோக்கி நகரும் இந்த சிறுத்தை மனித உயிர்களை காவு வாங்கும் முன் வனத்துறை சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...