கோத்தகிரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரேவனு கைத்தலா என்னும் பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார்(35) தந்தை பெயர் சுந்தரம். அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் ஜெயக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த தொடர்பால் அப்பெண்ணின் மகளையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இது குறித்து அப்போது குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது வரை கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறான், இதையடுத்து இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயக்குமாருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் ஆயுள் தண்டனையும் 3, ஆயிரம் அபராதம் ரூபாய் விதித்ததோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு சார்பில் ரூபாய் 6 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். 

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...