திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு காரணமான கண்டைனர் லாரி ஓட்டுனர் ஹேமராஜ் என்பவர் மீது 279, 337, 304(A) என்ற மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை, அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு காரணமான கண்டைனர் லாரி ஓட்டுனர் ஹேமராஜ் (37) என்பவர் மீது 279, 337, 304(A) என்ற மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை, அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை இறந்தவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பதும், 14 பேர் ஆண்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. மொத்தம் 48 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த 24 பேர் திருப்பூர் அரசு மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.