சென்னை: அத்திக்கடவு – அவினாசி திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு – அவினாசி திட்டம், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவாகும். இந்த திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இதற்காக, 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சட்டசபையில் இன்று, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் நிலை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார். மேலும், மதுரவாயல் மேம்பால திட்டம் கைவிடப்படவில்லை என்று கூறிய அவர், சாலையின் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால், மேம்பால பணி நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.