நீலகிரி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உதகை ஏ.டி.சி திடலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கையெழுத்து இயக்கம் என போராட்டங்களை பல அமைப்புகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் இஸ்லாமிய குழந்தைகள், பெண்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.