அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாநகராட்சி 74 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, தெருவிளக்கு, உப்பு நீர் விநியோகம், குடிநீர் விநியோகம் உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, இராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல பொறியாளர் பிரிவு அலுவலகம் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மாநகராட்சி 74 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, தெருவிளக்கு, உப்பு நீர் விநியோகம், குடிநீர் விநியோகம் உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, இராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல பொறியாளர் பிரிவு அலுவலகம் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பபட்டது. 

குறிப்பாக, 74 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படவில்லை எனவும், தெரு விளக்குகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், குடிநீர் விநியோகம் மற்றும் உப்பு நீர் விநியோகம் போன்றவையும் முறைபடுத்தப்பட வில்லை எனவும், இது தொடர்பாக பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் குற்றம் சாட்டினார். 

மாநகராட்சி் நிர்வாகம் விரைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை எனில் வரும் 11 ம் தேதி கோவை மாநாகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை முன் வைத்தும் சூயஸ் குடிநீர் விநியோகம் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்தும் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...