கோவை மாநகராட்சியின்‌ வரிவசூல்‌ பணிகள்‌ குறித்து உதவி ஆணையாளர்கள்‌, அலுவலா்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிராதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ மாநகராட்சியின்‌ வரிவசூல்‌ பணிகள்‌ குறித்து உதவி ஆணையாளர்கள்‌, அலுவலா்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று, நடைபெற்றது.

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிராதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ மாநகராட்சியின்‌ வரிவசூல்‌ பணிகள்‌ குறித்து உதவி ஆணையாளர்கள்‌, அலுவலா்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று, நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ சொத்துவரி, தொழில்வரி மற்றும்‌ இதர வரி இனங்களை வசூல்‌ செய்யும்‌ பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ துரிதமாக மேற்கொள்ள வேண்டுமெனவும்‌, அனைத்து மண்டலங்களிலும்‌, வரிவசூல்‌ செய்யும்‌ பணிகளை சிறப்பு முகாம்கள்‌ நடத்தி மேற்கொள்ள வேண்டுமெனவும்‌, உதவி ஆணையாளர்கள்‌ இது தொடர்பாக ஆய்வுக்‌ கூட்டங்களை நடத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ அறிவுறுத்தினார். 

மேலும்‌, வரிவசூல்‌ பணிகளின் போது பொதுமக்களிடம்‌ சுவச்ச் (Swacch Survekshan) தொடர்பாக EASE OF LIVING 2019 கருத்துக்கணிப்பில்‌ பங்கேற்க கோவை மக்களின்‌ வாழ்நிலை குறிப்பாக பெண்களின்‌ பாதுகாப்பு, கல்வி, மருத்துவம்‌ இவற்றில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ எப்படி உள்ளது என்பதற்கான பதிவுகளை ccmc.gov.in/eol இணையத்தில்‌ பிப்ரவரி 29 க்குள்‌ பதிவு செய்திட பொதுமக்கள்‌, பள்ளி, கல்லூரிகள்‌, வணிக நிறுவனங்களில்‌ விழிப்புணாவு ஏற்படுத்தும்‌ பணிகளையும்‌ அலுவலர்கள்‌ மேற்கொள்ள வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ ஷ்ரவன்குமார்‌ அவர்கள்‌ கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில்‌, உதவி ஆணையார்கள்‌ (வருவாய்‌) என்‌.௮ண்ணாதுரை, உதவி ஆணையார்கள்‌ வி.சரவணன்‌ (கணக்கு), ர.ரவி(தெற்கு), ம.செல்வன்‌ (கிழக்கு), செந்தில்குமார்‌ ரத்தினம்‌(வடக்கு), ஏ.ஜே.செந்தில்‌ அரசன்‌ (மேற்கு), மகேஷ்கனகராஜ்‌ (மத்தியம்‌) மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்கள்‌, வரிவசூல்‌ அலுவலாகள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...