கோவை எஸ் என் ஆர் அறக்கட்டளையில் கூன்ஞ்ச் துவக்கம்; கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் புதிய முயற்சி

கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற கூன்ஞ்ச் துவக்க விழா கருத்தரங்கில் 90 மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர். துவக்கவிழாவை கூன்ஞ்ச் நிறுவனர் அனுசு குப்தா, எஸ்என்ஆர் அறக்கட்டளை முதன்மை நிர்வாகி சுவாதி ரோஹித் ஆகியோர் துவக்கிவைத்தனர்


கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற கூன்ஞ்ச் துவக்க விழா கருத்தரங்கில் 90 மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர். துவக்கவிழாவை கூன்ஞ்ச் நிறுவனர் அனுசு குப்தா, எஸ்என்ஆர் அறக்கட்டளை முதன்மை நிர்வாகி சுவாதி ரோஹித் ஆகியோர் துவக்கிவைத்தனர்

கூன்ஞ்ச் விருது பெற்ற லாபநோக்கற்ற நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக, கூன்ஞ்ச் சமத்துவம், ஒற்றுமை வழிகள் மற்றும் பண நோட்டுக்கள், பணத்திற்கும் மேலாக ஒவ்வொருவரையும் மதிப்பிடுதல், கிராம ஏழைகள் உட்பட சமநிலையில் பாவித்தல், அவர்களுக்கு உள்ள பிரச்னகளுக்கும் சவால்களுக்கும் தீர்வு காண முயற்சித்தல், அவர்களது உலகை மேம்படச் செய்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

கூன்ஞ்ச் வறுமை பிரச்சனைகள், சமத்துவம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் கவுரவ பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறது. பிரச்சனைகளை உதவி சாரா முறையில் தீர்வு காணுதல், அவர்களின் குரல்களை கேட்கும் அமைப்பை உருவாக்குதல், அவர்கள் கொண்டுள்ள மதிப்பு மற்றும் அவர்களது பிரச்சனைகளை அவர்களே தீர்க்க வைத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இணைப்பாகவும், நீண் கலாச்சாரத்தை உருவாக்குவதோடு, வலிமையை மேம்படுத்துதல், துணிகள், சுகாதார பொருட்கள் வழக்கமாக கிடைக்க வழி வகுத்தல் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபட்டு வருகிறது.

முக்கிய முயற்சிகள்:

ரஹாத் பேரழிவுகள்: இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நீண்ட கால தேவை அடிப்படையில் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்

ஒரு துண்டு துணி மட்டுமல்ல (NJPC): நகர்ப்புறங்களின் உதவியோடு, வழக்கமான மாதவிடாய் ஒரு மனித பிரச்சனைகளைத் தீர்த்தல்.

பள்ளியிலிருந்து பள்ளிகளுக்கு: கிராமப்புற மாணவர்களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே ஒரு உறவை ஏற்படுத்துதல்.

கூன்ஞ்ச் பசுமை: நகர்ப்புறங்களின் தேவைக்கு அதிகமான பொருட்களை மறுசுழற்சி முறை பயன்பாட்டிற்கு புதிய பெயரை ஏற்படுத்துதல்.

மேலும் பல முயற்சிகளுக்கு - https://goonj.org/our-initiatives/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

பல புதுமையான முயற்சிகள்:

· சுஜ்னி: கந்தா, கோத்ரா போன்றவை ஒட்டுத்துணிகளைக் கொண்டு கிராமப்புற மக்களால் தயாரிக்கப்பட்டவை. இவை, கோடை காலங்களில் மெத்தைகளுக்கு பயன்படுத்த உதவும். பல ஆயிரம் பெண்கள் இவற்றை உருவாக்கி, தங்களது வாழ்வாதாரங்களுக்குப்பயன்படுத்துகின்றனர்.

· ஆசான்: சிறிய சிறிய சதுர வடிவிலான துணிகளை இணைத்து, விரிப்புகளை பெண்கள் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மேட்டுகள், பல ஆயிரம் குழந்தைகளுக்கு தீர்வாக அமைகின்றன.

· மை பேட்: நகரில் உள்ள தேவைக்கு அதிகமான பஞ்சுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பேடுகள், நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களை சென்றடைகிறது. பல மில்லியன்களுக்கு இன்னும் இத்தகைய பேடுகள் கிடைப்பதில்லை.

· பங்குதாரர்கள்: கூன்ஞ்ச் நாடு முழுவதும் உள்ள பல கிராமங்கள் மற்றும் நகரங்களை பங்குதாரர் மற்றும் ஒருங்கிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது. எங்களது பங்குதாரர்கள், கண்களால், காதுகளால், கைகளால், கால்களால் மற்றும் மனதால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவர்கள், மாற்றங்களால், உதவிகளால் வலுவூட்டப்பட்டு, எங்களது நோக்கங்களால் பாதுகாக்கப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள பங்குதாரர்கள், நகரங்களில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவி வருகின்றனர். உடனடியாகவும், அவசரமாகவும் உள்ள தேவைகளை ஆராய்ந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கிராமங்களில் எங்களது பணி

· தண்ணீர், கல்வி, வாழ்வாதாரம், அடிப்படை கட்டமைப்பு வசதி, பேரழிவு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, சுற்றுச் சூழல், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள்

· இவற்றின் விளைவுகள் பற்றி அறிய...https://goonj.org/impact என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

நுண் விளைவுகள்:

· தனி நபர் மாற்றத்தால், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துதல்:தனிநபர் மற்றும் சமுதாயத்தினருக்கு இலவசங்களையும், நன்கொடைகளுக்கும் பதிலாக, போட்டிகளையும், முடிவெடுக்கும் திறனையும் ஊக்குவித்து, பரிசுகளும் பாராட்டுக்களையும் வழங்கப்படுகிறது.

· தேவைக்குமேல் உள்ள நகர்ப்புற வளத்தை கிராம மேம்பாட்டுக்கு பயன்படுத்துதல்: நகர்ப்புறங்களில் உள்ள தேவையற்ற கழிவுகள், பொருட்களை கொண்டு கிராமங்களில் தேவையான பிரச்சனைகளுக்குப் பயன்படுத்துதல் மற்றும் கிராமப்புற ஏழைகளை ஒருங்கிணைத்து, சிறுசிறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.

புறக்கணிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்தல்:

பல ஆண்டுகளாக தொலைதூரத்தில் வாழும் மக்களுக்கும், மலைவாழ் பழங்குடியின மக்களுக்கும், நிலம் இல்லா ஏழைகளுக்கும் போதுமானதாக உடைகள் இல்லை. இவைகளை வழங்கியுள்ளோம். அவசர தேவைக்கு பணம் இல்லாத மக்களை, சேமிப்பால் கந்து வட்டியினரிமிருந்து காப்பாற்றியுள்ளோம்.

இயற்கையில் வளமான பகுதியில் ஒதுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு: காடுகள், மலைகள், தொடர்புகள் இல்லாத வளமான பகுதிகளில் உள்ள ஏழை மக்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு வாழ்வாதாரங்களைப் பெருக்கி, சமநிலையை உருவாக்க பாடுபட்டு வருகிறது.

வறுமையை விரட்ட பாடுபடுதல்:

பன்னோக்கு வறுமையின் பிடியில் உள்ள மக்களை கூன்ஞ்ச் தனது அணுகுமுறையால், மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிய செய்து மக்களின் வறுமையை விரட்ட பாடுபட்டு வருகிறது.

வறுமையை ஒழிப்பதில் பங்கேற்க செய்து, உலக வளங்களை பயன்படுத்த ஏழை சமுதாயம் பங்கேற்க வாய்ப்பளித்தல்:

வறுமையை போக்க, உலகில் உள்ள வாய்ப்புகளில் பங்கேற்க செய்ய கூன்ஞ்ச் பல வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து, பணியாற்ற வழி செய்கிறது.

2018 – 19 ல் சிறப்பம்சங்கள்:

1. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இயங்கி வருகிறது

2. 4600க்கும் மேற்பட்ட கிராமங்களை சென்றடைந்துள்ளது.

3. துணிகளை கொண்டு செய்யும் வேலைகளின் கீழ் 6200க்கும் மேற்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள்

4. 5500 டன் ஜவுளி கழிவுகளைக்கொண்டு 780 டன் பயனுள்ள ஜவுளி பொருட்களாக மாற்றியுள்ளது.

5. 2,48,400க்கும் மேற்பட்ட பேமிலி கிட்ஸ் களை வடிவமைத்து, 1.2 மில்லியன் மக்களை சென்றடையச் செய்துள்ளது. 1,01,100 குடும்பங்களுக்கு, பேரழிவு நிகழ்வு நிவாரணங்களும், மறுவாழ்வு பணிகளும் ரஹாத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6. ஒரு துண்டு துணியில் மட்டுமல்ல திட்டத்தில், 93000 பேர் பணியாற்றி, 1,240,700க்கும் மேற்பட்டோருக்கு சானிட்டரி பேடுகளை வழங்கியுள்ளது. 1,01,300 வயது வந்த குழந்தைகளுக்கு உள்ளாடைகளை அளித்துள்ளது.

7. பள்ளியிலிருந்து பள்ளி திட்டம், 1,47,400 மாணவர்களை சென்றடைந்துள்ளது.

8. நகர்ப்புறங்களில், பொருட்களை பெற 650க்கும் மேற்பட்ட முகாம்களையும் விழிப்புணர்வு முகாம்களையும், புத்தக கண்காட்சி போன்றவைகளை நடத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...