கோவை: வால்பாறையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுத்தோட்டம் ஆற்றை தூர்வாரும் பணியை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் முடுக்கிவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரை சுற்றி புதுத்தோட்டம் ஆறு மற்றும் நடுமலை ஆறு என இரண்டு ஆறுகள் உள்ளன. இந்த இரண்டு ஆறுகளும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. பருவமழை காலங்களில் இந்த ஆறுகளுக்கு வரும் மழைநீர் கரை புரண்டோடும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வாழைத்தோட்டம், காமராஜ் நகர், கக்கன் காலணி, சிறுவர் பூங்கா, டோபி காலணி பகுதியில் உள்ள சுமார் 500 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பகுதியில் வெள்ளம் புகுந்து போக்குவரத்து சேவை பல நாட்கள் முற்றிலும் முடங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னரே புதுத்தோட்டம் ஆற்றை தூர்வாரும் பணியை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் முடுக்கி விட்டுள்ளார்.

இதன்படி கக்கன் காலணியிலிருந்து ஸ்டான்மோர் எஸ்டேட் வரை ஆற்றில் உள்ள அடைப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு கரை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுவது முற்றிலும் தவிர்க்கப்படும். இதே போல், நடுமலை ஆற்றிலும் பணிகள் நடை பெறுகின்றன. மேலும் நகர் பகுதியிலுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.