கோவை: பாலக்காட்டில் இருந்து கோவை வரை வரும் பாசஞ்சர் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோவை – மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் 8 பெட்டிகள் உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக மேலும் 2 பெட்டிகள் இணைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: பாலக்காட்டில் இருந்து கோவை வரை வரும் பாசஞ்சர் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோவை – மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் 8 பெட்டிகள் உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக மேலும் 2 பெட்டிகள் இணைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பி.ஆர்.நடராஜன் எம்.பி கலந்துக்கொண்டு பேசினார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் அவர் பேசுகையில், பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கஸ்தூரிபாளையம் சாலைப்பகுதியில் சாக்கடை கட்டுவதற்கும், சாலையை புதுப்பிக்கவும் சேலம் ரயில்வே துறையிடம் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட ரயில் நிலையம் பகுதிகளில் குடிநீர், கழிப்பிட வசதி, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர பேசியுள்ளதாக தெரிவித்தார்.
பாலக்காட்டில் இருந்து கோவை வரை வரும் பாசஞ்சர் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோவை – மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயிலில் 8 பெட்டிகள் உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக மேலும் 2 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றவர், மங்களூர் – கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்பதை உடனடியாக அமலில் கொண்டு வரவேண்டும் என்றார்.
அதேபோல, உருமாண்டம்பாளையம் மற்றும் வீரபாண்டி பிரிவு ரயில்வே நிலையங்களை புதுப்பிக்க வேண்டும் எனவும் என்.ஜி.ஜி.ஓ காலனியில் இருந்து வட்டமலைபாளையம் செல்லும் சாலையிலுள்ள ரயில்வே கேட்டிற்கு புதிய பாலம் அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக அந்த பகுதியில் கையெழுத்து இயக்கத்தை கட்சி சார்பில் நடத்தவுள்ளதாக கூறினார்.
இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் பாலமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் கேசவமணி உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.