கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை
மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு பின்னர் தெரிவித்ததாவது,

மாவட்ட வாரியாக பணியாற்றிய முன்னாள் பணியாளர்கள் / ஓய்வூதியதார்களுக்கு அவர்களது கோரிக்கைகளாக நிலுவையிலுள்ள மருத்துவநலநிதி, குடும்பநலநிதி பணப்பலன்௧கள் குறித்து கணக்கெடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரரிடம் வழங்கிடும் நோக்கில் ஓய்வூதியர் குறைதர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறை, கல்வித்துறை, வளர்ச்சித்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஓய்வூதியதாரர்கள் குறைதர்க்கும் கூட்டம் நடத்தப்படுகின்றது. அதனடிப்படையில் கடந்த முறை நடத்தப்பட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 75 ஓய்வூதியதாரர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, 70 நபர்களுக்கு தீர்வளிக்கப்பட்டுள்ளது. 5 நபர்களுக்கு கூடுதல் விவரங்கள் கோரி சம்பந்தப்பட்ட துறைக்கும், ஓய்வூதியர்களுக்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, இம்முகாமிலும், 60 மனுக்கள் பெறப்பட்டுள்ளது, அவற்றில் 5 மனுக்களின் மீது உடனடித்தர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களுக்கு துரித நடவடிக்கை எடுக்கும்படி பிரிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியர் நலப்பிரிவில் பணியாற்றும் அலுவலர்கள் இன்றைய அலுவலர்கள் நாளைய ஓய்வூதியர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கனிவுடன் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலா் இராமதுரைமுருகன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர் மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுஜாதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.