கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஓய்வூதியதாரர்கள்‌ குறைதீர்‌ நாள்‌ கூட்டம்‌; 5 மனுக்களுக்கு உடனடித்‌ தீர்வு!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஓய்வூதியதாரர்கள்‌ குறைதீர்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஓய்வூதியதாரர்கள்‌ குறைதீர்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ அவர்கள்‌ ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை

மனுக்கள்‌ பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு பின்னர்‌ தெரிவித்ததாவது,



மாவட்ட வாரியாக பணியாற்றிய முன்னாள்‌ பணியாளர்கள்‌ / ஓய்வூதியதார்களுக்கு அவர்களது கோரிக்கைகளாக நிலுவையிலுள்ள மருத்துவநலநிதி, குடும்பநலநிதி பணப்பலன்௧கள்‌ குறித்து கணக்கெடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரரிடம்‌ வழங்கிடும்‌ நோக்கில்‌ ஓய்வூதியர்‌ குறைதர்க்கும்‌ கூட்டங்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டத்தில்‌ வருவாய்த்துறை, கல்வித்துறை, வளர்ச்சித்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளில்‌ பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின்‌ குறைகளை நிவர்த்தி செய்யும்‌ விதமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஓய்வூதியதாரர்கள்‌ குறைதர்க்கும்‌ கூட்டம்‌ நடத்தப்படுகின்றது. அதனடிப்படையில்‌ கடந்த முறை நடத்தப்பட்ட ஓய்வூதியர்‌ குறைதீர்க்கும்‌ கூட்டத்தில்‌ பல்வேறு துறைகளில்‌ பணியாற்றி ஓய்வு பெற்ற 75 ஓய்வூதியதாரர்களிடமிருந்து மனுக்கள்‌ பெறப்பட்டு, 70 நபர்களுக்கு தீர்வளிக்கப்பட்டுள்ளது. 5 நபர்களுக்கு கூடுதல்‌ விவரங்கள்‌ கோரி சம்பந்தப்பட்ட துறைக்கும்‌, ஓய்வூதியர்களுக்கும்‌ கடிதம்‌ வழங்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, இம்முகாமிலும்‌, 60 மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளது, அவற்றில்‌ 5 மனுக்களின்‌ மீது உடனடித்தர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்களுக்கு துரித நடவடிக்கை எடுக்கும்படி பிரிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும்‌, ஓய்வூதியர்‌ நலப்பிரிவில்‌ பணியாற்றும்‌ அலுவலர்கள்‌ இன்றைய அலுவலர்கள்‌ நாளைய ஓய்வூதியர்கள்‌ என்ற எண்ணத்தின்‌ அடிப்படையில்‌ கனிவுடன்‌ பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ இராமதுரைமுருகன்‌ அவர்கள்‌ தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர்‌ இளங்கோவன்‌, துணை இயக்குநர்‌ மதிவாணன்‌, மாவட்ட கருவூல அலுவலர்‌ ராஜா, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ சுஜாதா உட்பட அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌. 

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...