கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது

கோவை: எல்.எஸ்.டி போதை மருந்து தடவிய அட்டை வில்லை மற்றும் கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: எல்.எஸ்.டி போதை மருந்து தடவிய அட்டை வில்லை மற்றும் கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து எல்.எஸ்.டி போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் கஞ்சா கடத்தி வந்து கோவையில் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து, நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை மருந்து தடவிய வில்லைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 



இந்த நிலையில், போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு வின்சென்ட்க்கு தொலைபேசி மூலமாக கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட தனிப்படையினர் கோவை மயிலேரிபாளையம் கல்லூரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அவர்களிடம் எல்.எஸ்.டி எனும் போதை மருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் 1 கிலோ 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது, கோவையைச் சேர்ந்த ஷாஜி மகன் பிலால் (22), ஹரிபிரசாத் மகன் அர்ஜூன் பிரசாத் (22), மற்றும் கங்காதரன் மகன் சாரங் (22), என்பது தெரியவந்தது. 

இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...