சென்னையில் போராட்டத்தின் போது தடியடி: கோவையில் இஸ்லாமியர்கள் நள்ளிரவில் போராட்டம்

கோவை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோவையில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோவையில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால், பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் ஆத்துப்பாலம், உக்கடம் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர். 



மேலும், நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது எனவும் இஸ்லாமியர்கள் கோவையில் நடந்த போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பினர்.

இதை தொடர்ந்து போலீசார், உக்கடம், அத்துப்பாலம்  பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...