கோவை: கோவையில் செயல்படும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மத்திய பல்கலைக்கழக தமிழ்நாட்டின் கீழ் கொண்டு வரக் கோரி 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் செயல்படும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மத்திய பல்கலைக்கழக தமிழ்நாட்டின் கீழ் கொண்டு வரக் கோரி 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அவினாசி சாலையில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கிவரும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் மாணவ, மாணவர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் இல்லை எனவும், அதிகமான கல்விக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், அடிப்படை வசதிகளான விளையாட்டு மைதான கட்டணங்கள் உயர்ந்து கொண்டே இருப்பதாகவும் கூறிய மாணவர்கள், இதை மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் (CUTN) கீழ் கொண்டுவரக் கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 3 வருடங்களாக இந்த கோரிக்கையை மாணவர்கள் முன்வைத்து வரும் நிலையில், மத்திய அரசு இதனை கண்டு கொள்ளாததை கண்டித்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். மேலும் மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் கீழ் கொண்டு வரும் பட்சத்தில் மாணவர்களின் கல்விக்கட்டணம் குறையும் எனவும் முறையான அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பாக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.