கோவை: பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில், நரம்பியல் துறை சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில் பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். மருத்துவமனை டீன் ராமலிங்கம், நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை பேராசிரியர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, பி.எஸ்.ஜி மருத்துவமனை செயலி, லோகோ ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது. பி.எஸ்.ஜி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷணன் தலைமை வகித்து பேசினார்.
வெள்ளிவிழா ஆண்டையொட்டி, இந்த ஒரு வருடம் முழுவதும் சிறப்பு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. 8000 மூளை அறுவை சிகிச்சையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சையும் இதுவரை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சலுகை கட்டணத்திலும், அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலமும் மருத்துவ சேவைகளை பி.எஸ்.ஜி மருத்துவமனை அளித்து வருகிறது.
மேலும், விபத்தின் போது தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் அவசர உதவி சிகிச்சைக்கு 7449 108 108 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராஜேந்திரன், பாலு ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.